Tap to Read ➤

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடும் வழக்கம் இருப்பது ஏன்?

குழந்தைக்கு மொட்டையடிப்பதற்கான அறிவியல் தத்துவம் !!
Sidhanathan K
குழந்தை பிறந்ததும் ஒரு வருடத்திற்குள் மொட்டை போடவேண்டும் என்பது நமது பாரம்பரிய வழக்கங்களுள் ஒன்று.
மொட்டையுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு காது குத்தும் வழக்கமும் பல இடங்களுள் உண்டு.
பொதுவாக முதல் மொட்டை அவரவர் குலதெய்வ கோவில்களில் எடுப்பது வழக்கம். பல இடங்களில் மொட்டை எடுக்காமல் இருப்பது தெய்வ குத்தமாகவும் கருதப்படுகின்றது.
குழந்தைகள் அம்மாவின் கருவறையில் பத்து மாத காலம் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.
கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை கலந்த தண்ணீர் குழந்தைகளை சுற்றி சூழப்பட்டு இருக்கும்.
இந்த தண்ணீரில்தான் குழந்தையின் உடல் முழுவதும் ஊறிப்போயிருக்கும்.
சாதாரணமாக கடல்நீரில் 5 நிமிடம் கை வைத்திருந்தாலே கை கழுவிய பிறகும் கூட உப்பின் ருசி ஒட்டியிருக்கும் மற்றும் கை ஊறி போய்விடும்.
அப்படியானால், 10 மாதங்கள் தண்ணீரில் இருக்கும் குழந்தையின் உடல் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அந்த நீரில் மூழ்கி ஊறியிருக்கும்.
உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது எளிது. ஆனால் மயிர்க்கால்களில் தேங்கியுள்ள கழிவுகள் அவ்வளவு சீக்கிரம் வெளியேறாது. அதனால்தான் இந்த மொட்டை எடுக்கும் சடங்கு செய்யப்படுகிறது.
அதற்கு ஏன் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்? பிறந்த சில மாதங்களுக்குள் எடுக்கலாமே என்று யோசிக்கலாம்.
குழந்தையின் தலை பகுதி மிகவும் லேசானது. அதிலும் உச்சி மிகவும் மென்மையானது.
குழந்தையின் தலை பகுதியானது மொட்டைக்கு தயாராவதற்கு குறைந்தது ஒரு வருடமாவது தேவைப்படும். அதனால்தான் நம் முன்னோர்கள் ஓராண்டுக்குள் மொட்டை அடிக்க வேண்டும் என்கிறார்கள்.