Tap to Read ➤

பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவை உண்பது ஏன் ஆபத்தானது..?

பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளை உண்பதால் ஏற்படும் பிரச்சனைகள்!!
Sidhanathan K
உலகில் உள்ள மக்காத பொருட்களில் முதன்மையானது பிளாஸ்டிக்.
பிளாஸ்டிக் பாத்திரங்களில் அடைக்கப்பட்ட உணவுகளை உண்பதால் தைராய்டு பிரச்சனை மற்றும் பிற பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முடி உதிர்தலில் தொடங்கி 70 சதவீத வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு இதுவே மூல காரணம்.
கடைகளில் மலிவான பிளாஸ்டிக் டப்பாக்கள் நிறைய வந்துவிட்டன. அவை அனைத்தும் தரமானவை அல்ல.
பொதுவாக, பிளாஸ்டிக்குகள் BPA (BisPhenol-A) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றன.
இந்த வேதிப்பொருள் முடி உதிர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
இது ஹார்மோன் பாதிப்பையும், நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் உண்டாக்கும்.
சில நிறுவனங்கள் அதற்குப் பதிலாக BPS (Bisphenol S) என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்துகின்றன.
BPA மற்றும் BPS இணைந்த கலவையே லீச்சிங் (LEACHING) ஆகும். இது நம் உடலுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
பிபிஏ மற்றும் பிபிஎஸ் இரசாயனங்கள் ஐந்தில் ஒருவருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு நோய் ஏற்படலாம்.
குறைந்த வயதிலேயே பெண்கள் பூப்பெய்தி விடவும் வாய்ப்புள்ளது.
இது பிளாஸ்டிக் டப்பாக்களால் மட்டுமல்ல, தெரு ஓரங்களில் பிளாஸ்டிக் பேப்பர்களில் விற்கப்படும் உணவை சாப்பிடுவதாலும் ஏற்படுகிறது.