ஆரோக்கியமான வாழ்க்கையின் அடிப்படை சத்துகளில் புரோட்டீன் முக்கிய இடத்தை பெறுகிறது.
குழந்தைகளின் உயர வளர்ச்சிக்கும், பெரியவர்களின் உடல் சக்திக்கும், தசை பலம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் மிகவும் அவசியமான சத்தாகும்.
தினசரி உணவில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.
1. முட்டை-உயர் தரமான புரோட்டீன் கொண்ட உணவு. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தசை பலத்திற்கும் உதவும்.
2. பால்- கால்சியம் மற்றும் புரோட்டீன் நிறைந்தது. எலும்பு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
3. பாதாம்- புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்பு சத்துகள் நிறைந்து
4. சோயா- சைவ உணவு உண்பவர்களுக்கு மிகச்சிறந்த புரோட்டீன் ஆதாரம்.
5 மீன்- உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது.
6. கோழி இறைச்சி- தசை வளர்ச்சிக்கு உதவும் உயர்தர புரோட்டீன் கொண்ட உணவு.
சரியான அளவு புரோட்டீன் உடலுக்கு கிடைத்தால் வளர்ச்சி, சக்தி மற்றும் ஆரோக்கியம் மேம்படும். எனவே, இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்