இந்தியாவில் மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளிலும் 13 என்ற எண் துரதிர்ஷ்டவசமானது என்று ஆணித்தரமாக நம்பப்படுகிறது.
இந்தப் பதிவில் 13 என்ற எண்ணைப் பற்றிய அச்சத்தின் பின்னணியில் உள்ள வரலாற்றைக் காண்போம்.
இயேசு கிறிஸ்துவின் கடைசி விருந்தில் கலந்து கொண்ட 13 விருந்தினர்களில் 13 வதாக வந்தவர் யூதாஸ் இஸ்காரியோட். அவர்தான் இயேசுவை காட்டிக்கொடுத்தவர்.
இதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை இயேசு கிறிஸ்து தூக்கில் இடப்பட்டார்.
இது தவிர, ஸ்காண்டிநேவிய புராணங்களின்படி கடவுள்களின் விருந்தில், குறும்பு மற்றும் துரதிர்ஷ்டத்தின் கடவுள் லோகி 13-வதாக வந்தார். அவரது குறும்புத்தனம்தான் பால்தூர் கடவுளின் மரணத்திற்கு வழிவகுத்தது.
இதனால்தான் மேற்கத்திய நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி ராசியில்லாத நாளாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில் 1.7 கோடி முதல் 2.1 கோடி மக்கள் இந்த நாளின் பயம் காரணமாக விமானத்தில் பயணிப்பதையோ அல்லது வேலைக்குச் செல்வதையோ தவிர்க்கின்றனர்.
இன்னும் சிலர் படுக்கையில் இருந்து கூட எழுவதில்லை. இதனால் அன்றைய தினம் 800 முதல் 900 மில்லியன் டாலர் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுவாக இவ்வாறு மூடநம்பிக்கையினால் ஏற்படும் அதீத பயம் அல்லது வேறு சில உச்சகட்ட அச்ச உணர்வை ஒரு வகையான ஃபோபியா என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எண் 13 பற்றிய இந்த பயம் ட்ரிஸ்கைடேகாபோபியா (Triskaidekaphobia) என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல், எண் 13 பற்றி எண் கணிதத்துடனும் தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது.
அதாவது, மாதங்களில் 12, ராசிகளில் 12 மற்றும் கடிகாரத்தில் கூட 12 மணி நேரம் என்று தான் உள்ளது. மாறாக 13 என்று குறிக்கப்படுவதில்லை.
மேலும், அறை எண் 13 அல்லது 13 வது மாடியை உலகின் பல பகுதிகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பார்க்க முடியாது. 12 வது மாடிக்குப் பிறகு நேரடியாக 14 வது மாடி இருக்கும்.