Sidhanathan K       Aug 28, 2024

நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் ஏன் அவசியம்..?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயை கட்டுப்படுத்த சரியான உணவு முறையை பின்பற்றவேண்டியது அவசியம்.

பல உணவுகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும். அவ்வாறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பது நீரிழிவு நோயாளியின் நிலையை மேலும் மோசமாக்கும்.

அவ்வாறு, ஒரு உணவு இரத்த சர்க்கரை அளவை எவ்வளவு அதிகரிக்கும் என்பதை அளவிட பயன்படும் மதிப்பீடை தான் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) என்கிறோம்.

அந்தவகையில், நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உதவுகிறது.

உணவின் ஊட்டச்சத்து கலவை, சமைக்கும் முறை மற்றும் அதன் செயலாக்கத்தின் அளவு போன்ற பல காரணிகள் உணவின் கிளைசெமிக் குறியீட்டை பாதிக்கின்றன.

பொதுவாக, குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்ட உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தாது. ஏனெனில் அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.

அந்தவகையில், 55-க்கும் குறைவான கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது. அதேபோல், 70-க்கு மேல் இருந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

குறைந்த கிளைசெமிக் உணவுகள்: ஆப்பிள், பெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, புரோக்கோலி, காலிஃபிளவர், கேரட், கீரை, தக்காளி, பார்லி, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ்.

அதிக கிளைசெமிக் உணவுகள்: நான், அரிசி, இன்ஸ்டன்ட் ஓட்ஸ், உருளைக்கிழங்கு, பிரஞ்சு பிரைஸ், கேக், டோனட்ஸ், குக்கீஸ், சாக்லேட், மைக்ரோவேவ் பாப்கார்ன், சிப்ஸ், சோடா.