Tap to Read ➤

இதையெல்லாம் ஏன் வாஸ்து சாஸ்திரப்படி அன்பளிப்பாக கொடுக்கக்கூடாது?

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் இந்த பொருட்களை பரிசாக கொடுக்க கூடாது !!!
Sidhanathan K
ஒருவரிடம் அன்பை வெளிப்படுத்த சில பொருட்களை அன்பளிப்பாக கொடுப்பது தீமையை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வாஸ்து சாஸ்திரப்படி துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை பரிசாக கொடுக்கவோ வாங்கவோ கூடாது.
கடிகாரங்களை அன்பளிப்பாக கொடுத்தோமானால், வாழ்நாட்களின் எண்ணிக்கையை குறைத்து விடும்.
நெருக்கமானவர்களுக்கு கத்தி, கத்திரிக்கோல் போன்ற கூர்மையான ஆயுதங்களை பரிசாக வழங்குவது, உறவின் பிரிவுக்கு காரணமாக இருக்கும்
காலணிகள் பரிசாகக் கொடுத்தால், அதை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும்.
நாம் செய்யும் வேலை தொடர்பான பொருட்களை பரிசாக கொடுத்தால், அது நமது வேலையின் திறனை குறைத்து விடும்.
தண்ணீர், மீன் தொட்டிகள் மற்றும் வெள்ளி தொடர்பான பொருட்களை பரிசாக கொடுப்பது நமது அதிர்ஷ்டத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது போன்றதாகும்.
உயிர் உள்ள செல்லப்பிராணிகளை நண்பர்களுக்கு பரிசாக கொடுத்தால் அது அவரின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும்.
நண்பர்களுக்கு காதல் புத்தகங்களை பரிசாக அளிக்கும் போது, அது நட்பு உறவினை பாதிக்கும் என்று வாஸ்துப்படி சொல்லப்படுகிறது.
நாம் பிறரிடம் இருந்து பெற்ற ஒன்றை நம் நெருங்கிய நண்பர்களுக்குப் பரிசாகக் கொடுத்தால், அது நமது செல்வத்தைக் கொடுப்பதற்கு ஈடாகும்.
தங்கம் மற்றும் வெள்ளியாலான ஜோடி யானை பொம்மைகளைப் பரிசாகக் கொடுக்கலாம்.
இயற்கையாக பூமியிலிருந்து கிடைக்கும் அழகிய சிலைகள், பூந்தொட்டி போன்ற பொருட்களை பரிசாக கொடுக்கலாம். இதனால் வாழ்நாட்கள் மற்றும் அவர்கள் வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும்.