Tap to Read ➤

தீபாவளியில் எண்ணெய்க் குளியல் செய்வது ஏன்?

தீபாவளியன்று அதிகாலையே எண்ணெய் குளியல் செய்வது சிறப்பானது.
HTML Tamil
மனதில் மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும் தீபாவளி பண்டிகை, 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து இறைவனை வழிபாடு செய்வதே தீபாவளியின் தனிச் சிறப்பாகும்.
தீபாவளி நன்னாளில் செய்யும் நீராடலை, 'கங்காஸ்நானம்' என்று புனிதமாகச் சொல்வார்கள்.
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக்குளிப்பது என்பது வெறும் சடங்கு மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்புகளும் உண்டு.
நல்லெண்ணெய்யில் சிறிதளவு சாம்பிராணி, விரலி மஞ்சள் ஒரு துண்டு, ஓமம் ஆகியவற்றுடன் சேர்த்து காய்ச்ச வேண்டும்.
நல்லெண்ணெய்யை காய்ச்சிய பின்னர், நன்கு ஆற வைத்து பின்னர் உடலில் தேய்த்து கொள்ள வேண்டும்.
நல்லெண்ணெய் மகாலட்சுமிக்கும், சாம்பிராணி ராகு பகவானுக்கும், விரலி மஞ்சள் குரு பகவானுக்கும் உரியதாக கூறப்படுகிறது.
ஓமம் புதன் பகவானுக்கும், மிளகாய் செவ்வாய் பகவானுக்கும் உரியது. இவ்வாறு நவகிரகங்களுக்கும், எண்ணெய் குளியலுக்கும் தொடர்புண்டு என கூறப்படுகிறது.
தவறாமல் தீபாவளி நன்னாளில், அதிகாலையிலேயே எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளவது மிகவும் நல்லது.
24-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளும் அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும் எண்ணெய் குளியல் செய்வது சிறப்பானது.