Tap to Read ➤

ஆன்லைன் டெலிவெரியின்போது கேட்கப்படும் OTP எதற்காக தெரியுமா ?

ஓபன் பாக்ஸ் டெலிவரி !!
Sidhanathan K
இப்போதெல்லாம் கடைக்குச் செல்வதை காட்டிலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வருகிறோம்.
சில இ-காமர்ஸ் தளங்கள் குறிப்பாக பண்டிகை காலங்களில் பல்வேறு வகையான சலுகைகளை வழங்குகின்றன.
ஆன்லைனில் நமக்குத் தேவையானதை ஆர்டர் செய்யும் போது, பொருள் சரியாக வந்துள்ளதா எனப் பார்க்கிறோம்.
ஒரு வேலை நாம் ஆர்டர் செய்தது ஒரு பொருளாகவும், டெலிவரி செய்யப்பட்டது மற்றொன்றாகவும் இருந்தால் என்ன செய்வது?
இதற்காக கொண்டு வரப்பட்டது தான் ஓபன் பாக்ஸ் டெலிவரி கான்செப்ட்.
சில சமயங்களில் Amazon, Flipkart போன்ற இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது OTP கொடுக்க வேண்டும்.
OTP கொடுக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர் டெலிவரி செய்பவரின் முன் பார்சலைத் திறந்து சரியான பொருள் வந்துள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
பார்சலை சரிபார்த்து OTP கொடுக்காமல், அதில் வேறு ஏதேனும் பொருள் இருந்தால், அதைத் திருப்பித் அனுப்பவோ, பணத்தைத் திரும்ப பெறவோ முடியாமல் சிக்கல் ஏற்படலாம்.
இந்த ஓப்பன்-பாக்ஸ் டெலிவரி கான்செப்ட் தெரியாமல் நம்மில் பலர் பார்சலை பெறுவதற்கு தான் இந்த OTP என்று கொடுத்திருப்போம்.
எனவே தான் ஆர்டர் செய்த பொருள் சரியாக இருந்தால் மட்டும் ஓடிபி-யை கொடுப்பது நல்லது.