Tap to Read ➤

புதுச்சேரி மக்கள் பிரான்ஸ் தேர்தலில் வாக்களிப்பது இதனால்தான்!

Oversea French citizens to vote in France President election:
பிரான்ஸ் அதிபர் தேர்தல் தமிழகம் புதுச்சேரியிலும் நடைபெறும் நிலையில், அந்நாட்டில் அதிபர் தேர்தல் முறையைச் பார்க்கலாம்.
ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும், பிரான்ஸ் அதிபர் சேர்தலில் ஒருவர் வெல்ல absolute majority பெற வேண்டும்.
அதாவது தேர்தலில் வெல்ல, ஒட்டுமொத்தமாக பதிவாகும் வாக்குகளில் குறைந்தது 50% வாக்குகளைப் பெற வேண்டும்.
முதற்கட்ட தேர்தலில் 50% வாக்குகளைப் பெறவில்லை என்றால், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் நபர்களுக்கு 2ஆம் கட்ட தேர்தல் நடத்தப்படும்.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பிரான்ஸில் நடந்த முதற்கட்ட தேர்தலில் யாருக்கும் 50% வாக்குகள் கிடைக்கவில்லை.
பிரான்ஸ் தற்போதைய அதிபர் மக்ரோன் (27.85%) மற்றும் மரைன் லு பென் (23.15%) ஆகியோர் முதல் இரு இடங்களைப் பிடித்தனர்,
இதையடுத்து மக்ரோன் மற்றும் மரைன் லு பென் இடையே இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
பிரான்ஸ் சட்டப்படி அதிபர் தேர்தலில் பிரான்ஸ் ஆளுகைக்கு உட்பட அனைத்து பிராந்தியங்களில் வசிக்கும் மக்களும் வாக்களிக்கலாம்.
அதன்படி புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள பிரான்ஸ் குடிமக்கள் அதிபர் இன்று வாக்களித்தனர்.