Tap to Read ➤

நாய்களுக்கு ஏன் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் ?

எந்த மாதத்தில் எந்த தடுப்பூசி போட வேண்டும்?
Sidhanathan K
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அதிலும் நாய் வளர்க்க பலரும் ஆசைப்படுவர்.
நாய்களை வளர்ப்பது மட்டுமின்றி, நோய் வராமல் இருக்க அவைகளுக்கு தடுப்பூசி போட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
நாய்களுக்கு நோய் வருவது மட்டுமின்றி, நாய்களால் நமக்கு நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.
ரேபிஸ் என்ற கொடிய நோய் வெறிநாய் கடிப்பதால் ஏற்படுகிறது. இந்த நோய் முதிர்ச்சியில் மரணத்திற்கு வழிவகுக்கும்.
அவ்வாறு கடித்துவிடும் பட்சத்தில் காயம்பட்ட இடத்தை நீர் மற்றும் சோப்பினால் நன்கு கழுவவேண்டும்.
கடித்த நாள் முதல் 3, 7, 14, 28 நாட்கள் என ஐந்து தவணைகள் நாய்க்கடிக்கு ஊசி போடவேண்டும்.
தடுப்பூசி போடப்பட்ட நாய், போடப்படாத நாய் என எது கடித்தாலும் ரேபீஸ் வர வாய்ப்புண்டு.
ரேபிஸ் தவிர எக்கினோகாக்கஸ் ஒட்டுண்ணியால் ஏற்படும் 'ஹைடடிட் (Hydatid)' என்ற கொடிய நோய் நாய்களினால் பரவுகிறது.
நாய்க்குட்டிகள் பிறந்த பிறகு அவை வளரும் வரை மாதாந்திர தடுப்பூசிகள் உள்ளன. அவற்றை கவனமாக தவறாமல் போட வேண்டும்.
எந்த வகையான நாய்க்குட்டியாக இருந்தாலும் பிறந்து நான்கு வாரத்தில் முதல் தவணை டோஸாக Nobivac Puppy DP தடுப்பூசி போட்டுவிட வேண்டும்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு Nobivac DHPPi தடுப்பூசி போட வேண்டும். முதல் டோஸை தவறவிட்டாலும் இந்த தடுப்பூசியை போடலாம்.
மருத்துவரின் ஆலோசனைப்படி, அடுத்த 10-15 நாட்களில் Nobivac DHPPi (Booster) தடுப்பூசி போட வேண்டும்.
பிறந்து மூன்று மாதங்களுக்கு பிறகு Anti-Rabies Vaccine (ARV) தடுப்பூசி போட வேண்டும்.
பின்னர் ரேபிஸ் தடுப்பூசி ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயமாகும். ரேபிஸ் தடுப்பூசி கடைசி டோஸ் தேதியிலிருந்து ஒரு வருடம் கணக்கிட்டு கொடுக்கப்பட வேண்டும்.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரை தொடர்பு கொண்டு Nobivac DHPPi தடுப்பூசியை செலுத்திக்கொள்வது நல்லது.