AI-IMAGE
பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடம் பெறும் சுக்கு, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் இயற்கை மூலிகையாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக சுக்கு காபி, உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பானமாக பலரால் பயன்படுத்தப்படுகிறது.
காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல் மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் சுக்கு காபி குடித்து வந்தால் நிவாரணம் பெறலாம்.
எலும்பு மெலிவு காரணமாக ஏற்படும் மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு அசௌகரியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுக்கு காபி உதவியாக இருக்கும்.
தொடர்ந்து உடல் வலி மற்றும் சோர்வால் அவதிப்படுபவர்கள், சுக்கு காபியை பால் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ குடித்து வந்தால் உடல் அசதி குறைய உதவலாம்.
சுக்குடன் வெல்லம் சேர்த்து குடிப்பது மூட்டு வலி மற்றும் தலைவலி குறையும்.
தினமும் அளவோடு சுக்கு காபி குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உடல்நலப் பிரச்சனைகள் நீடித்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.