Tap to Read ➤

ரயில்வே ஜங்ஷன் போர்டில் MSL என்று ஏன் குறிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் அதனை கவனித்திருக்கிறீர்களா ?
Sidhanathan K
பேருந்தில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வது நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
ரயிலில் பயணிக்கும்போது ரயில்வே சந்திப்புகளின் தொடக்க மற்றும் முடிவில் மஞ்சள் பெயர் பலகையில் ஊர்களின் பெயர்கள் கருப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஊர்களின் பெயர்களுக்கு கீழே MSL என்று குறிக்கப்பட்டிருப்பதை நோட் பண்ணிருக்கீங்களா ?
MSL என்பது கடல் மட்டத்தில் இருந்து அந்த ஸ்டேஷன் எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது என்பது தான் அதன் பொருள்.
மீன் சீ லெவல் (Mean Sea Level) என்பதன் சுருக்கமே MSL என குறிப்பிடப்படுகிறது.
இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு MSL குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் பயணிக்கும் உயரத்திற்கு ஏற்ப ரயிலின் வேகத்தை ரயில் ஓட்டுநர் கட்டுப்படுத்த முடியும். இது அனைத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.