எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் டி ஊட்டச்சத்து அவசியம். இது உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவை கட்டுப்படுத்துகிறது.
உடலில் வைட்டமின் டி குறைவால் எலும்பு அடர்த்தி குறைதல், ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோமலாசியா மற்றும் எலும்பு முறிவுகள் போன்றவை ஏற்படும்.
மேலும், உங்கள் மூளைக்கும் உடலுக்கும் இடையே செய்திகளை எடுத்துச் செல்ல நரம்புகளுக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது. அதேபோல், நோயெதிர்ப்பு அமைப்புக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட வைட்டமின் டி தேவைப்படுகிறது.
வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை பாதிக்கும் ரிக்கெட்ஸ் (Rickets) எனும் அரிய வகை நோயை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் வயதானவர்களுக்கும் இந்நோய் தாக்கக்கூடும்.
சூரிய ஒளியானது வைட்டமின் டி ஊட்டச்சத்திற்கு சிறந்த மூலமாகும். சூரிய ஒளி வைட்டமின் D இன் சிறந்த ஆதாரமாக இருந்தாலும், சால்மன், காளான், பால், ஆரஞ்சு, தானியங்கள் மற்றும் முட்டை ஆகியவற்றை தினசரி உட்கொள்ளளில் அதிகரிக்கலாம்.
உடல் சோர்வு, எலும்பு வலி, தசை பலவீனம், தசைப்பிடிப்பு மற்றும் மனச்சோர்வு போன்றவை வைட்டமின் டி குறைபாட்டின் சில பொதுவான அறிகுறிகள் ஆகும்.
உணவில் இருந்து சரியான அளவு வைட்டமின் டி மற்றும் கால்சியம் பெறுவது, ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கவும் உதவுகிறது.
ஆரோக்கியமான இதயத்திற்கு வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி ஊட்டச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும், உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.