Tap to Read ➤

தீபாவளியன்று புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிப்பது ஏன்?

தீபாவளி குறித்து புராணங்கள் கூறும் காரணங்களை தெரிந்துகொள்வோம்.
HTML Tamil
தீமை அழிந்து, நன்மை பிறந்த தினமான தித்திக்கும் தீபாவளி பண்டிகை, வரும் 24-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
தீபவாளியன்று காலையில் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, இறைவனையும், பெரியவர்களையும் வணங்குகிறோம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தீபாவளி தினத்தில், புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிப்பது குறித்து, புராணங்கள் கூறும் காரணங்களை தெரிந்துகொள்வோம்.
பகவான் கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்தபோது, இந்நாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என நரகாசுரன் வேண்டியதாக புராணங்கள் கூறுகின்றன.
நரகாசுரனின் வேண்டுதலின்படியே, தீபாவளி தினத்தன்று அனைவரும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்சியுடன் கொண்டாடுகிறோம்.
தீபவாளி தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளித்து உடலை துய்மையாக்கி, நமது உள்ளத்தில் உள்ள மாசுகளை களைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
தீய குணங்களை மனதில் இருந்து நீங்கி, நற்குணங்களை பெறுவதே தீபாவளி தினத்தில் புத்தாடை அணிவதன் நோக்கமாகும்.
தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசை என்று பொருள். இறையருளால் அனைத்து துன்பங்ளும் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சியடைய தீபம் ஏற்றி வழிபடுகிறோம்.
தீபாவளியன்று இனிப்புகளை இறைவனுக்கு படைத்து, அனைவருக்கும் வழங்குகிறோம். எல்லோரும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை செய்கிறோம்.
பட்டாசு வெடிப்பதன் நோக்கம், பேராசை, கோபம், கர்வம், பொறாமை ஆகிய தீய குணங்கள் பட்டாசைப் போல பொசுங்கி, நற்குணங்களை பெறவேண்டும் என்பதே ஆகும்