Tap to Read ➤

முளைத்த உருளைக்கிழங்கை ஏன் சாப்பிடக்கூடாது ?

முளை கட்டிய உருளைக்கிழங்கு சாப்பிட்டால் ஆபத்து !!
Sidhanathan K
உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் சமைக்காமல் வைத்திருப்பதால் முளை விட்டுவிடும்.
ஒரு புறம் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது என்றாலும், இது நச்சுத்தன்மை வாய்ந்தது. அதனால் புட் பாய்சன் ஏற்படக்கூடும்.
முளைவிட்ட உருளைக்கிழங்கில் க்ளைக்கோஆல்கலாய்டு அளவு அதிகம் இருப்பதால் மனிதர்கள் இதனை உட்கொள்வதால் நச்சுத்தன்மை அதிகரிக்கும்.
இதை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.
ஆனால் அதிக அளவு உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம், வேகமான நாடித்துடிப்பு, காய்ச்சல், தலைவலி மற்றும் சில சமயங்களில் மரணத்தை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் இதனை உட்கொள்வதால் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு.
உருளைக்கிழங்கை மொத்தமாக வாங்கி சேமித்து வைப்பதை விட, தேவைக்கேற்ப வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
முளைத்த உருளைகிழங்கை தோல் உரித்து பயன்படுத்துவதால், அதன் க்ளைக்கோஆல்கலாய்டு அளவு குறைந்தாலும், அதன் நச்சுத்தன்மை குறைவதாக போதுமான சான்றுகள் இல்லை.
அதனால்தான் முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது பாதுகாப்பான முறை.