Tap to Read ➤

புதுத்துணியில சாயம் போகுதா..? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!

துணிகளின் நிறம் மாறாமல் புதிய ஆடை போலவே இருக்க சில டிப்ஸ்..!
Sidhanathan K
துணிகள் வாங்க ஜவுளிக்கடைக்குச் சென்றால் அங்கு பிடித்திருக்கும் சட்டையோ அல்லது பேண்ட்டோ இந்த கலர் சாயம் போய்விடுமோ என்ற பயம் இருக்கலாம்.
அந்த பயத்தினால் பிடித்த ஆடையை எடுக்க முடியாமல் போகும் பயம் இனி வேண்டாம்.
முதலில் ஒரு வாலி எடுத்து அதில் வைத்துள்ள துணிக்கு ஏற்றாற்போல் தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்த நீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
பின் அந்த தண்ணீரில் 2 ஸ்பூன் வினிகர், ஒரு கைப்பிடி கல் உப்பு போன்றவை சேர்த்து கலந்து விட வேண்டும்.
வினிகர் சேர்த்த தண்ணீரில் சாயம் போகக்கூடிய துணியை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய துணியை துவைத்து நன்றாக அலசி காய வையுங்கள்.
துணி காய்ந்ததும் ஆடையை பயமில்லாமல் பயன்படுத்தலாம்.
மேலே உள்ள உதவிக்குறிப்பை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தினால் துணி காலத்துக்கும் மங்காது.