Tap to Read ➤

உலகக் கோப்பை கால்பந்து :   'A' மற்றும் 'B' குரூப் அணிகள்...!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன.
HTML Tamil
உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுத் திருவிழா, கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது.
உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.
'A' பிரிவில்

 கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்தும்,

 'B' பிரிவில்

 இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் அணிகளும் உள்ளன.
கத்தார்

உலகத் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ளது. உலகக்கோப்பை போட்டியில் விளையாட முதல்முறையாக தகுதி பெற்றுள்ளது.
ஈகுவடார்

உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ளது. 4-வது முறையாக உலகக்கோப்பை போட்டியில் இந்த அணி களமிறங்குகிறது.
செனகல்

உலகத் தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள இந்த அணி, 3-வது முறையாக உலகக்கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
நெதர்லாந்து

உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி உலகக் கோப்பை போட்டியில் 10 முறை பங்கேற்றுள்ளது. 3 முறை இறுதியாட்டம் வரை முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து

உலகத் தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ளது. 1966-ல் சொந்த மண்ணில் உலகக்கோப்பை நடத்தி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த உலகக் கோப்பை தொடரில், அரையிறுதி வரை முன்னேறியது.
ஈரான்

உலகத் தரவரிசையில் 20-ம் இடத்தில் உள்ள ஈரான், 5-வது முறையாக உலகக்கோப்பையில் களமிறங்குகிறது. இதுவரை குரூப் சுற்றை இந்த அணி கடந்ததில்லை.
அமெரிக்கா

 உலகத் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ளது. இதுவரை 10 முறை உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளது. ஒரே ஒரு முறை மட்டும் காலிறுதிக்கு முன்னேறியது.
வேல்ஸ்

உலகத் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள வேல்ஸ் அணி, 64 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது.