Tap to Read ➤

உலகக்கோப்பை கால்பந்து 'C' மற்றும் 'D' குரூப் அணிகள்..!!

உலகக்கோப்பையில் பங்கேற்கும் 'C' மற்றும் 'D' குரூப் அணிகள் குறித்து ஓர் அலசல்.
HTML Tamil
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா, கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது.
உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றுள்ளன
'C' பிரிவில்
அர்ஜெண்டினா, சவூதி அரேபியா, மெக்சிகோ, போலந்தும்,

'D' பிரிவில்
 ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், டுனீசியாவும் உள்ளன.
அர்ஜெண்டினா

உலகத் தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ளது. 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 17 முறை உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளது. கேப்டன் மெஸ்ஸிக்கு இது 5-வது போட்டியாகும்.
சவூதி அரேபியா

உலகத் தரவரிசையில் 51-வது இடத்தில் உள்ளது. 6-வது முறையாக உலகக்கோப்பை போட்டியில் சவூதி அரேபியா விளையாட உள்ளது.
மெக்சிகோ

உலகத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ளது. 17-வது முறையாக பங்கேற்கும் மெக்சிகோ, இருமுறை காலிறுதி வரை முன்னேறியுள்ளது.
போலந்து

உலகத் தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ளது. 8-வது முறையாக விளையாட உள்ளது. அதிகபட்சமாக 2 முறை 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
ஃபிரான்ஸ்

2 முறை சாம்பியன் பட்டம் (1998, 2018) வென்றுள்ளது. தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ளது. 16-வது முறையாக உலகக்கோப்பை போட்டியில் களமிறங்குகிறது.
ஆஸ்திரேலியா

உலகத் தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ளது. 7-வது முறையாக விளையாட உள்ளது. 2006-ல் ரவுண்ட் ஆஃப் 16 வரை முன்னேறியுள்ளது.
டென்மார்க்

 உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளது. 6-வது முறையாக களமிறங்கும் டென்மார்க், 1998-ல் காலிறுதி வரை முன்னேறியுள்ளது.
டுனீசியா

 உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ளது. உலகக்கோப்பையில் 6-வது முறையாக பங்கேற்றுள்ளது. அதிகபட்சமாக 1978-ல்
 9-ம் இடத்தை பிடித்தது. .