Tap to Read ➤

உலகக் கோப்பை கால்பந்து: பெண் ரசிகர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!

கத்தாரில் பெண்கள் அரைகுறை ஆடைகள் அணிவது குற்றமாகும்.
HTML Tamil
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா,  கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது.
உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை நேரில் பார்ப்பதற்காக, உலகெங்கும் உள்ள ரசிகர்கள் கத்தாரில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கால்பந்து போட்டியை நேரில் காணவரும் பெண் ரசிகர்களுக்கு கத்தார் நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பொதுவாக கால்பந்துப் போட்டியை நேரில் காணவரும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண் ரசிகர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது.
குறிப்பாக, பெண்கள், தங்கள் இஷ்டபடி ஆடைகளை அணிந்துகொண்டு, மைதானத்தில் போட்டியை உற்சாகமாக கண்டுகளிப்பார்கள்.
சில சமயம் தங்கள் நாட்டு அணி கோல் அடித்தால், ஆண், பெண் ரசிகர்கள் தங்களது மேலாடைகளை கழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் உண்டு.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் கத்தார் நாட்டில், பெண்கள் அரைகுறை ஆடைகள் அணிந்தால், அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
கத்தார் நாட்டு சட்ட விதிகளை மதித்து, கவர்ச்சியான உடைகள் அணிவதை பெண் ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதை கடைப்பிடிக்க தவறும் பெண்களுக்கு, சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் கத்தார் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
மைதானங்களில் ரசிகர்களை கண்காணிக்க, ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப் பட்டிருப்பதாகவும் கத்தார் அரசு எச்சரித்துள்ளது.