Tap to Read ➤

உலகக் கோப்பை கால்பந்து :  கத்தாருக்கு வந்த  சொகுசுக் கப்பல்

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெறவுள்ளது.
HTML Tamil
உலகக்கோப்பை கால்பந்துத் திருவிழா கத்தாரில் வரும் 21-ம் தேதி தொடங்கி 28 நாட்கள் நடைபெறவுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சிகள் வரும் 20-ம் தேதி கத்தாரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
தொடக்க விழாவில், கொலம்பிய பாடகி ஷிகிரா, ஆங்கில நட்சத்திரம் துவா லிபா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
தென் கொரியாவின் பிரபல பாப் இசைக்குழுவான BTS-ம் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கோப்பைத் திருவிழாவில் 32 அணிகள் பங்கேற்கிறது. இந்த அணிகள், 4 அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்படும்.
கத்தாரின் Al Bayt மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் கத்தாரும், ஈக்குவடார் அணியும் மோதுகின்றன.
உலகக்கோப்பை கால்பந்து நடைபெறும் கத்தார் நாட்டுக்கு, உலகின் மிகப் பெரிய சொசுக் கப்பல் வந்தடைந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய பயணக் கப்பல்களில் ஒன்றான MSC World Europa கப்பலில் 22 தளங்கள் உள்ளன.
உலகக் கோப்பை போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்காக இந்த கப்பல் தோஹாவுக்கு வந்தடைந்துள்ளது.
6,700-க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் இந்த சொகுசு கப்பலில், ஒரு நபர் ஒருநாள் இரவு தங்குவதற்கு, 347 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
உலகக்கோப்பைத் தொடர் முடியும் வரை, 2 நபர்கள், சொசுக் கப்பலில் தங்குவதற்கு, 85,000 டாலர்கள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.