Tap to Read ➤

உலக உணவு தினம்: பட்டினியில்லா சமுதாயம் உருவாக வேண்டும்!

உணவை சேமித்து ஏழைகளுக்கு வழங்கி, பட்டினியில்லா சமுதாயத்தை உருவாக்குவோம்.
HTML Tamil
1945-ம் ஆண்டு, அக்டோபர் 16-ம் தேதி, ஐ.நா. சபையின் துணை அமைப்பான உணவு வேளாண் நிறுவனம் தொடங்கப்பட்டது.
உணவை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இதே தினத்தில் உணவு தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆரோக்கிமான உணவு, பட்டினில்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் பசி, பட்டியால் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே இந்த நாளின் குறிக்கோளாகும்.
இந்த ஆண்டிற்கான உலக உணவு தினம், 'பசியோடு யாரையும் விட்டு விடாதீர்கள்' (Leave NO ONE behind) என்ற கருப்பொருளின் அடிப்படையில் கடைபிடிக்கப்பட்டது
ஊட்டச்சத்து உணவுகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த நாளின் மற்றொரு குறிக்கோளாகும்.
உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள், உணவு ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.
வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உணவின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் நாள்தோறும்  கற்றுக் கொடுக்கலாம்.
'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என மகாகவி பாரதியார் முழக்கமிட்டார்.
இனியாவது உணவை வீணாக்குவதை தவிர்த்துவிட்டு, பசியால் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவளித்து சேவை செய்ய அனைவரும் உறுதியேற்போம்.