Tap to Read ➤

உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றி...!

பறக்கும் கார் 2025ம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
HTML Tamil
சீனாவின் ஸ்பெங்க் என்ற நிறுவனம், 2 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையிலான பறக்கும் காரை துபாயில் அறிமுகப்படுத்தியுள்ளது.
X-2 எனப் பெயரிடப்பட்ட இந்த பறக்கும் கார் முற்றிலும் எலெக்ட்ரிக் பேட்டரியில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
செங்குத்தாக மேலெழும்பி, தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார், மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
பறக்கும் காரில் ஏறியவுடன் செல்ல வேண்டிய இடத்தை மார்க் செய்துவிட்டால்  தானாகப் பறந்து அந்த இடத்திற்குச் சென்று விடும்
இந்த பறக்கும் கார், குறுகிய தூரத்திற்கு மனிதர்கள் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் பயணிக்க பயன்படுகிறது.
முற்றிலும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் திறன் கொண்டதால் இது பறக்கும் போது எந்த வித காற்று மாசும் ஏற்படுவதில்லை.
இந்த பறக்கும் கார் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்தில் மிகப்பெரிய புரட்சியே ஏற்படும் என்பதில் ஐயமில்லை.