Varalakshmi N       May 10, 2026

 ஹோட்டல் & டிரயல் ரூமில் ஹிடன் கேமரா பயமா? பெண்களே இந்த டிரிக்ஸ் உங்களை பாதுகாக்கும்!

இன்றைய டிஜிட்டல் காலத்தில் தனியுரிமை பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. சிறிய விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் இருந்தால் தனியுரிமையை பாதுகாப்பது மிகவும் எளிது.

குறிப்பாக ஹோட்டல் அறைகள், டிரஸ் ஷாப் டிரயல் ரூம்கள் போன்ற இடங்களில் மறைமுக கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் பலரிடமும் உள்ளது. சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு பாதுகாப்பு சோதனைகள் செய்வது     நல்லது.

ஹிடன் கேமராவை கண்டுபிடிக்கும் சில வழிகளை இப்பதிவின் மூலம்     தெரிந்துகொள்ளலாம்

அறையில் உள்ள சுவர் கடிகாரம், டிவி செட்-டாப் பாக்ஸ், LED லைட் போன்ற     இடங்களில் சிறிய கேமராக்கள் மறைக்கப்பட்டிருக்கலாம். சந்தேகமாக இருந்தால், அந்த பொருட்களை அகற்றவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ     நிர்வாகத்திடம் கேட்டு உறுதி செய்து கொள்ளலாம்.

அறையை இருட்டாக்கி மொபைல் Flash Light ஒளியை சுற்றிலும் காட்டுங்கள். கேமரா லென்ஸ் இருந்தால் சிறிய ஒளி பிரதிபலிப்பு தெரியும்.

சில மறைமுக கேமராக்களில் Infrared sensor இருக்கும். மொபைல் கேமராவை திறந்து அறையை ஸ்கேன் செய்தால் சிவப்பு அல்லது வெள்ளை ஒளி புள்ளிகள் தெரிந்தால் சந்தேகிக்கலாம்.

டிரயல் ரூமில் உள்ள கண்ணாடி மீது விரலை வையுங்கள். விரலும்     பிரதிபலிப்பும் இடைவெளி இல்லாமல் இருந்தால் அது 2 -way mirror ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.

சில கேமராக்கள் Wi-Fi மூலம் இயங்கும். Mobile apps மூலம் அருகிலுள்ள சந்தேகமான devices-ஐ கண்டறியலாம்.

சந்தேகம் இருந்தால் உடனே புகார் அளிக்கவும், ஹோட்டல் மேலாளர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பே     முதன்மை.