Tap to Read ➤

அறிமுகமாகிறது சொமேட்டோவின் இன்டர்சிட்டி ஃபுட் டெலிவரி முறை!!

இந்தியா முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் உணவை ஆர்டர் செய்யும் முறை
Sidhanathan K
ஃபுட் டெலிவரி நிறுவனமான சொமேட்டோ வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றாற்போல் புதிது புதிதாக டெலிவரி டெக்னிக்குகளை அறிமுகப்படுத்துகிறது.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் உணவை ஆர்டர் செய்து சாப்பிடக்கூடிய இன்டர்சிட்டி உணவு டெலிவரி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முறையின் மூலம், வாடிக்கையாளர்கள் இனி இந்தியாவின் எந்தப் பகுதியிலும் உள்ள எந்த உணவகத்திலிருந்தும் உணவைப் பெறலாம்.
அதாவது இருக்கும் இடத்திலிருந்தே பேமஸ் ஊர்களின் பேமஸ் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடலாம்.
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய Zomatoவின் ஃபுட் செயின் கனெக்‌ஷன் விரிவாக்கப்படும் என்று Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் கூறியுள்ளார்.
சொமேட்டோ ஆப்பிலுள்ள இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் (Intercity Legends) என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஆர்டர் செய்யலாம்.
ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மற்ற நகரங்களில் உள்ள உணவுவகைகள் விமானம் மூலமாக கொண்டு வரப்பட்டு டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொமேட்டோ புதிதாக சமைக்கப்பட்ட உணவை குளிர்பதன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேதமடையாத கண்டெய்னர்களில் வழங்குகிறது.
முதற்கட்டமாக குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சொமேட்டோ டெலிவரி சேவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.