நடிகை சிந்து மரணம்
இணைந்த கைகள் உள்ளிட்ட சில திரைப் படங்களிலும், ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள நடிகை சிந்து மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்தார்.
இவர் நடிகை மஞ்சுளாவின் சகோதரி சியாமளாவின் மகளாவார். இணைந்த கைகள் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அந்தப்படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு பட்டிக்காட்டுத் தம்பி, பரம்பரை, சின்னத்தம்பி உள்பட பல படங்களில்நடித்துள்ளார்.
திரைப் படங்களில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். கோகுலம் வீடு, எங்க குடும்பம்,தோழிகள்,ஆனந்தம், மெட்டி ஒலி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார்.
இந் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுனாமி நிதிக்காக சின்னத்திரை நடிக, நடிகையர் வீதி வீதியாகச் சென்று நிதி வசூல் செய்தனர்.ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள சிந்துவும் இதில் கலந்து கொண்டு நிதி சேகரித்தார். நீண்ட தூரம் நடந்ததால் அவருக்கு மூச்சுத் திணறல்ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சைபலனளிக்காமல் இறந்தார்.
சிந்துவுக்கு வயது 33. கன்னடத் திரைப்பட இயக்குனர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த சிந்து அவரை பின்னர்விவாகரத்து செய்து விட்டார். அவர் மூலம் சிந்துவுக்கு 9 வயதில் மகள் உள்ளார்.
இந் நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் டிவி நடிகர் ரிஷியை திருமணம் செய்து கொண்டு அவருடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்.
மறைந்த சிந்துவுக்கு ஏராளமான தொக்ைகாட்சி நடிகர், நடிகையர்கள் அஞ்சலி செலுத்தினர். மருத்துவமனையில் அவரது உடலைமஞ்சுளாவின் கணவரான நடிகர் விஜய்குமார் குடும்பத்தினர் வந்திருந்தார்.
திரையுலகம் அஞ்சலி:
நுங்கம்பாக்கத்தில் உள்ள சிந்துவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி,அருண்குமார், விஜய்குமார், ராமராஜன், பாண்டியராஜன், அருண்பாண்டியன் மற்றும் பல்வேறு டிவி நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நடிகைகள் ராதிகா, லட்சுமி, கே.ஆர்.வத்சலா, அஞ்சு, பூஜா, தீபா வெங்கட், ஸ்ரீப்ரியா, வனிதா உள்ளிட்டோரும், இயக்குனர்கள் சுந்தர்.சி,ஆபாவாணன் உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ். கருப்பையா மரணம்:
பழம் பெரும் நடிகரான டி.கே.எஸ். கருப்பையா மரணடைந்தார்.
எம்ஜிஆரின் பல படங்களில் நடித்த கருப்பையா சமீபத்திய எஜமான், முதல்வன் உள்பட 600க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கலைமாமணி பட்டம் பெற்ற அவர் நேற்று மரணமடைந்தார். அவருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications