தாக்குதல் நடத்திய 10 இலங்கை மீனவர்கள்-துரத்திப் பிடித்த சென்னை மீனவர்கள்
சென்னை: இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சென்னை காசிமேடு மீனவர்களைத் தாக்கி விட்டுத் தப்ப முயன்ற இலங்கை மீனவர்கள் பத்து பேரை காசி மேடு மீனவர்கள் படகுகளில்துரத்திச் சென்று பிடித்து சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகை பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், சென்னை மீனவர்கள், தங்களைத் தாக்கிய இலங்கை மீனவர்களை துரத்திப் பிடித்து சென்னைக்கு கொண்டு வந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள், 30 விசைப் படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் இலங்கை மீனவர்கள் அங்கு வந்தனர்.
தமிழக மீனவர்களைத் தாக்கி அவர்கள் வைத்திருந்த மீன் பிடி வலை, வயர்லஸ் கருவி உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். மீனவர்களையும் கடுமையாக தாக்கினர்.
இந்த செய்தியை சில மீனவர்கள்தாங்கள் வைத்திருந்த வயர்லஸ் கருவி மூலம் கடலில் ஆங்காங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்களுக்குத் தெரிவித்தனர்.
இதையடுத்து மின்னல் வேகத்தில் மீனவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதைப் பார்த்ததும் இலங்கை மீனவர்கள் தப்பி ஓடினர். ஆனால் சென்னை மீனவர்கள் மீனவர்களை விரட்டிச் சென்றனர். இதில் இரு படகுகள் மட்டும் சிக்கிக் கொண்டன.
அவற்றை தமிழக மீனவர்கள் மடக்கி படகுகளையும், அதில் இருந்த 10 மீனவர்களையும் பிடித்து தமிழகம் நோக்கி விரைந்தனர். கரைக்கு வந்ததும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸாரும், கியூ பிரிவு போலீஸாரும், ஐபி அதிகாரிகளும் விரைந்து வந்தனர்.
இலங்கை மீனவர்களின் தாக்குதலில் காயமடைந்த தமிழக மீனவர்கள் அருண், அலெக்ஸ், கமல், ராஜன், அல்போன்ஸ், விஜய், திருப்பதி, யோகராஜ் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் கே.பி.பி.சாமி பார்த்து ஆறுதல் கூறினார்.
பிடிபட்ட இலங்கை படகுகளில் வெடிகுண்டு உள்ளிட்ட ஏதேனும் இருக்கிறதா என்று அதிகாரிகள் தீவிர சோதனையிட்டனர். பின்னர் 2 படகுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட இலங்கை மீனவர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயா உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் இதுதொடர்பான அறிக்ைக மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications