'88888': இன்று இரவு 8 நிமிடம் இருட்டு!

 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

சென்னை: உலகம் வெப்பமாதலை தடுக்க எக்ஸ்னோரா நிறுவனம் '88888' பிச்சார நிகழ்ச்சியை இன்று நடத்துகிறது. அதன்படி இன்று இரவு 8 மணியிலிருந்து 8 நிமிடங்களுக்கு மின்சார பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

மின் உபகரணங்கள், வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நஞ்சுகலந்த குளோரா, புளோரா கார்பன், மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.

காடுகளின் பரப்பும் குறைந்துள்ளதால் உலகம் வெப்பமாகி வருகிறது. அதனால் பனிமலைகள் உருகுவதால் கடலின் நீர்மட்டம் உயருகிறது. அதனால் பல பகுதிகள் நீரில் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உலகம் வெப்பமாதலை தடுக்க வேண்டியது அவசியம்.

இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த '88888' என்ற நிகழ்ச்சியை எக்ஸ்னோரா நடத்துகிறது.

2008ம் ஆண்டு, 8வது மாதமான ஆகஸ்டில், 8ம் தேதியான இன்று இரவு 8 மணிக்கு 8 நிமிடங்களை மின் விளக்குகள், உபகரணங்களை சுவிட்ச் ஆப் செய்யும்படி எக்னோரா கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு மக்கள் அனைவரும் மறக்காமல் மின் விளக்கு உள்பட எல்லா மின்சார சாதனங்களையும் 8 நிமிடங்கள் நிறுத்து வைக்குமாறு எக்ஸ்னோரா நிர்வாகிகள் நிர்மல், விஜயலெட்சுமி ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

Write a Comment