புலி ஆதரவு கட்சிகளுடன் உறவு இல்லை-காங்

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு காரணமான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் சிலர் புலிகளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து பேசியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசும் யாருடனும், எந்த கட்சியுடனும் காங்கிரஸ் எந்த உறவும் வைத்துக் கொள்ளாது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தெளிவான நிலையைக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
காங். எம்எல்ஏக்கள் கூட்டம்:
இதற்கிடையே புலிகளை ஆதரித்துப் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை பதவி விலகக் கோரிய வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், அருள் அன்பரசு ஆகியோர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இந் நிலையில் சட்டசபை வளாகத்திலுள்ள காங்கிரஸ் தலைவர் அலுவலகத்தில் அக்கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடந்தது.
அதில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், அருள் அன்பரசு, ஜான் ஜேக்கப், வேல்துரை, அசன் அலி, சிவராஜ், பழனிச்சாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தமிழக அரசுக்கு எதிராக ஆவேசமாக கருத்துக்களைத் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாகவும் பேசுவோர் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருவதாகவும் இதை அரசு கண்டும் காணாமல் இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க சட்டமன்ற காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவர்களை சுதர்சனமும், பீட்டர் அல்போன்சும் சமாதானப்படுத்தினர்.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுதர்சனம், இன்று நடைபெற்றது முறையான எம்எல்ஏக்கள் கூட்டமல்ல. வெகு விரைவில் அக்கூட்டம் நடைபெறும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
தனித் தமிழ்நாடு கோஷத்தை சிலர் (மதிமுக பொருளாளர் கண்ணப்பன்) எழுப்பியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார்.
-
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்!












Click it and Unblock the Notifications