நெருங்கும் ஜெனிவா கூட்டம்! பிப்.8-ந் தேதி இந்தியா வருகிறார் மகிந்த ராஜபக்சே!
கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் வரும் 8-ந் தேதி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரும் நிலை இருக்கிறது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கருத்தாக உள்ளது. ஆனால் தமக்கு ஆதரவாக இந்தியாவை திசை திருப்ப இந்திய தலைவர்களை சந்திக்க மகிந்த ராஜபக்ச வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.
புத்தகயாவில் உள்ள ஆலயத்தில் வழிபாடு நடத்தவே ராஜபக்சே வருகிறார் என்று கூறப்பட்டாலும் அவர் ஜெனிவா கூட்டத்தை முன்வைத்தே இந்தியாவுக்கு வருகிறார் எனக் கூறப்படுகிறது.
கடந்த முறை சாஞ்சிக்கு வந்த ராஜபக்சேவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ மத்திய பிரதேச மாநிலத்துக்கே சென்று போராட்டம் நடத்தியிருந்தார். மேலும் மீண்டும் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதித்தால் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் வைகோ அறிவித்திருக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே, இந்தியா வருகை தர இருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications