நாற்காலிக்கு ஆசைப்படும் புண்ணியவான்களே... இந்த சேர்-ல உட்காருவீங்களா...?
அரசியல் ஆசை என்பதையே நாற்காலி மோகம் என்று தான் பொதுவாக வர்ணிப்பார்கள். அந்தளவுக்கு பதவியில் இருப்பவர்களுக்கு நாற்காலிகள் மேல் ஆசை உண்டு.
பொதுவாகவே, மனிதனுக்கு சற்று உயரமான இடத்தில் அமர்வது பிடித்திருக்க வேண்டும். அதன் மூலம் தன்னை பிறரிடமிருந்து உயர்ந்தவன் எனக் காட்டும் எண்ணம் போலும்.
ஆதிகாலம் தொட்டே, திண்ணைய்யில் தொடங்கி இன்று சேர், சோபா என கலந்து கட்டி அடிக்கும் மக்களே, ஒரு காமெடிக்காக பின்வரும் சேர்களில் நீங்கள் அமர்ந்தால் எப்படி இருக்கும் என உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டுப் பாருங்களேன்...

பக்கா, அரசியல் சேர்...
கை போன்று தோற்றமளிப்பதால் இது காங்கிரஸுக்கு சொந்தமான சேர்னு தப்பா முடிவு பண்ணிடாதீங்க... கீழ பாதமும் இருக்கு.

கரடிசேர்...
கரடி தாயத்துக் கட்டினா பயம் போகும்னு நம்பும் மக்களே, இந்த கரடிச் சேர்ல உக்காந்தா நீங்க எங்கயோ போய்டுவீங்க...

3 இடியட்ஸ் சேர்...
இத எங்கயோ பாத்த மாதிரி இருக்கா... 3 இடியட்ஸ் மற்றும் நண்பன் படத்துல நம்ம ஹீரோ உட்கார்ந்துருப்பாரே... அதே தான்.

தர்பூஸ் சேர்..
தர்பூசணில ஹெல்மெட் பார்த்துருப்பீங்க.... சேர் பார்த்துருக்கீங்களா

வாத்து சேர்...
வாத்துக் கறி பிரியர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப் பட்டதாம். ஆனா, இதுல உட்கார்ந்தா ‘வாத்து' மாதிரி தான் யோசனை வருமாம்.

அணு சேர்...
அணுவைத் துளைத்து, அதில் உட்கார்வதைப் போன்ற மன நிறைவைத் தரும் மாடல் சேர்.

சுவர் சேர்...
உங்களுக்கு சுவரில் நடக்கும் பழக்கம் இருந்தால், இந்தச் சேரில் எப்படியும் அமரலாம்.

ஹைஹீல்ஸ் சேர்....
நல்லா உத்துப் பாருங்கப்பா... அவங்கல்லாம் சேர்ல தான் உட்கார்ந்துருக்காங்க

சேருல முள்ளு...
சிறு வயதில் டீச்சரின் சேரில் முள் வைத்தவர்கள் நினைவாக உருவாக்கப்பட்ட சேர் இது. பயப்படாம உட்காரலாம், இந்த முள்ளு குத்தாது.

துப்பாக்கி சேர்...
முன்னாடியே பார்த்திருந்தா நம்ம இளைய தளபதி படத்துல பயன் படுத்திருக்கலாம். மத்தபடி, இது ஒண்ணும் தீவிரவாதிகள் சேர்லாம் இல்லை.

இதுவும் சேர் தான்...
நல்லா உத்துப் பாருங்க... அவர் கைல இருக்கறது கோர்ட், அவர் உட்கார்ந்திருக்கிறது சேர்...
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications