ரஜினியின் 173வது படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி? 2022லேயே கதை சொன்ன 'டான்'! டிக்கடித்த Rajini?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தின் (Thalaivar 173) இயக்குநர் யார் என்பது குறித்து இன்றைய தினம் அறிவிப்பு வெளியாகிறது. இந்த நிலையில் அந்த இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் எப்படி ரஜினியை கவர்ந்தார் என்பதை பார்க்கலாம்.
கூலி படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் கமல் தயாரிப்பில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு, கமலின் பிறந்தநாளையொட்டி நவம்பர் 6ஆம் தேதி வெளியானது. அந்த படத்தை சுந்தர் சி இயக்குகிறார் என சொல்லப்பட்டது.
அவரும் கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு வந்து ரஜினி, கமலிடம் இருந்து வாழ்த்துகளை பெற்றார். பொதுவாக சுந்தர் சி, கலகலப்பான படங்களை எடுப்பவர். பேய் படங்களாக இருந்தாலும் அதில் அவருக்கே உரித்தான காமெடியை வைத்திருப்பார்.
ரஜினிக்கு காமெடி என்பது நன்றாக வரும். காமெடி + காமெடி சேர்ந்தால் அடிதூள்தான் என ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ரஜினியை பழைய படி கமெர்சியல் படங்களில் பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
இப்படி இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திடீரென சுந்தர் சி அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இதற்கு காரணமாக அவர் தனிப்பட்ட விவகாரம் என சொல்லிவிட்டார்.
இதனால் கமல்ஹாசன் தயாரிப்பில் தலைவர் 173 படம் தொடருமா இல்லை டிராப் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே ரஜினி சில இளம் இயக்குநர்களுடன் கதையை கேட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் ரஜினியின் 173 ஆவது படத்திற்கான இயக்குநர் யார் என்ற அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது. இப்படிப்பட்ட நிலையில் அந்த இயக்குநர் "டான்" படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏன் சிபி சக்கரவர்த்தி என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ரிவ்யூவர் லட்சுமிகாந்த் என்பவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: "டான்" படம் வெளியான பிறகு "சிவாஜி" போல் ஒரு கமர்சியல் படத்தின் கதையை ரஜினிக்கு சிபி சொன்னதாக தெரிகிறது. அந்த கதை மிகவும் பிடித்து போகவே லைகா தயாரிப்பில் அந்த படத்தை எடுக்கலாம் என ரஜினி முடிவு செய்திருந்தாராம்.
மேலும் அந்த படத்தில் அரவிந்த்சாமி, கல்யாணி பிரியதர்ஷன், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசை என்றும் அப்போது நிறைய தகவல்கள் கிடைத்தன. அவையெல்லாம் உண்மைதானா என தெரியவில்லை. 2022 ஆம் ஆண்டில் சொன்ன கதையைத்தான் ரஜினி ஓகே சொல்லியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. எனவே தலைவர் 173 படம் எப்படி இருக்கும் என்பதை பொருத்தே இந்த தகவல்கள் உண்மையா இல்லை வதந்தியா என தெரியவரும்.












Click it and Unblock the Notifications