19 மணி நேரம் போராட்டம்... ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை உயிருடன் மீட்பு
பெரோசாபாத் : உத்தரபிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டான்.
பெரோசாபாத் மாவட்டத்தில் உள்ள சைபூரி கிராமத்தை சேர்ந்தவர் பிரிஜேஷ். அவரது 2 வயது மகன் கிஷன். நேற்று சிறுவன் கிஷன் தனது வீடு அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அருகே உள்ள வயலில் இருந்த 70 அடி திறந்த வெளி ஆழ்துளை கிணற்றில் கிஷன் தவறி விழுந்தான்.

இதுபற்றிய தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. பெற்றோர்களும் பொது மக்களும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்து வந்து 8 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சிறுவன் விழுந்த இடத்திற்கு அருகே ராட்சத பள்ளம் தோண்டி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் சுமார் 19 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சிறுவன் கிஷன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான். அவனை உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
குழந்தை நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் கிராம மக்கள், குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications