For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியில் நீதி கிடைக்கவில்லையாம்… மைல் கற்களில் இந்தியை அழித்து கன்னட அமைப்பினர் போராட்டம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் கர்நாடகத்திற்கு நீதி கிடைக்கவில்லையாம். அதனால் மைல் கற்களில் இருக்கும் இந்தி எழுத்துக்களை மை பூசி அழித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

தொடர்ந்து நீடித்து வரும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் மத்திய அரசு முறையாக தீர்வு காணவில்லை என்பதால், விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையிலுள்ள மைல்கற்களில் இந்தி சொற்களை மை பூசி அழித்து வருகின்றனர்.

Anti-Hindi Agitation in Karnataka over Cauvery issue

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து எழுந்த பிரச்சனையின் போதே மைல்கற்களில் சென்னை என்ற பெயரை கன்னட அமைப்பினர் அழித்தனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலுள்ள பிற நகரங்களைக் குறிப்பிடும் மைல்கற்களில் உள்ள இந்தி எழுத்துகளையும் அழிக்கத் தொடங்கி உள்ளனர். சென்னை, ஊட்டி உள்ளிட்ட தமிழகத்தின் இதர நகரங்களைக் குறிக்கும் பெயர்களை மை பூசி அழித்து வருகின்றனர் கன்னட அமைப்பினர்.

இதுவரை நெடுஞ்சாலையாக இருந்த பெங்களூரு-மைசூரு சாலை சமீபத்தில் என் எச் 275 என்ற தேசிய நெடுஞ்சாலையாக உயர்த்தப்பட்டது. இச்சாலை ஊட்டி, சேலம், சத்தியமங்கலம், வயநாடு, மனந்தவாடி, கோழிக்கோடு, சுல்தான் பத்தேரி, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள இதர நகரங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் குறைந்தது 2 லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka farmers have smeared the Hindi names, which referred Tamil Nadu cities, on milestone in NH 275 National High way over Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X