For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒடிஷாவிலும் இயல்பு வாழ்க்கை முடக்கம்... கோசல் தனி மாநிலம் கோரி 11 மாவட்டங்களில் 'பந்த்'

By Mathi
Google Oneindia Tamil News

சம்பல்பூர்: குஜராத்தில் படேல் சமூகம் இடஒதுக்கீடு கோரி பந்த் நடத்தி அம்மாநில இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதைப் போல ஒடிஷாவிலும் 'கோசல்' தனி மாநிலம் கோரி நேற்று 11 மாவட்டங்களில் நடத்தப்பட்ட முழு அடைப்பு மக்கள் வாழ்க்கையை முடக்கியது.

ஒடிஷாவின் ஜர்ஸ்குடா, சம்பல்பூர், ரூர்கேலா, சுந்தர்கார், டியோகார், பர்கார், சோனேபூர், கலஹாண்டி மற்றும் நுவபட உள்ளிட்ட 11 மாவட்டங்களை ஒருங்கிணைத்து 'கோசல்' மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இதற்காக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Odisha Districts

இக்கோரிக்கையை வலியுறுத்தி 12 மணிநேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த 11 மாவட்டங்களில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டன. இதேபோல் தனியார் கல்வி நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டன.

பல்வேறு இடங்களில் பேரணிகளும் நடைபெற்றன. இருப்பினும் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தனி மாநில கோரிக்கையால் ஒடிஷா அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

English summary
Normal Life was hit in 11 western Odisha districts as business establishments and offices remained shut and vehicular traffic came to a halt due to bandh demanding a separate Koshal state on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X