Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருப்பு பணம்: மூன்று பேர் பெயரை உச்சநீதிமன்றத்திடம் அளித்தது மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள 3 பேரின் பெயர்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணமாக சுவிஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள, பணம் பல ஆயிரம் கோடியை தாண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருப்பு பண மீட்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் இன்று மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளது.

இந்த பிரமாணப் பத்திரத்தில் யாருடைய பெயர்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கும், சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் யார், யார், தமிழக அரசியல்வாதிகள் பெயர்கள் இதில் உள்ளதா என்பது போன்ற ஆர்வம் பல தரப்பிலும் எழுந்திருந்தது.

Black money: The government is set to file the first affidavit in the Supreme Court with the names of three account holders

இந்த பிரமாணப்பத்திரத்தில், இந்தப் பட்டியலில் டாபர் குழுமத்தின் முன்னாள் இயக்குநர் பிரதிப் பர்மன், ராஜ்கோட் பகுதியைச்சேர்ந்த பங்கஜ் சிமன்லால் லோதியா, கோவாவைச் சேர்ந்த ராதா எஸ். டிம்போலா ஆகிய 3 பேரின் பெயர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது.

இந்த மூவரில் ஒருவரும் அரசியல்வாதி கிடையாது. இருப்பினும் இன்னும் பல கட்டங்களாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. மொத்தம் 138 பெயர்கள் கொண்ட பட்டியல் மத்திய அரசிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருப்பு பண விவகாரத்தில் டாபர் நிறுவன முன்னாள் இயக்குனர் பிரதீப் பர்மன் பெயர் அடிபட்டுள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் இப்போதையே இயக்குனர்களில் ஒருவரான மோகில் பர்மன் ஐபிஎல் கிரிக்கெட் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்த அணிக்கு டாபர் நிறுவனம், புரமோட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் கருப்பு பணம் வைத்துள்ளோர் பட்டியலில் தனது பெயர் இருப்பது குறித்து பிரதீப் பர்மன் கூறுகையில், சுவிஸ் வங்கியிலுள்ள எனது கணக்கு சட்டத்திற்கு உட்பட்டதுதானே தவிர, அது கருப்பு பணம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

கருப்பு பணம் வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ராதா எஸ். டிம்போலா 2009-10ம் நிதியாண்டில் அட்வான்ஸ் வருமான வரியாக ரூ.30.8 கோடியை செலுத்தியுள்ளார். அதேபோல அந்த ஆண்டில் மேலும் கூடுதல் வருமான வரியாக ரூ.20 கோடியை கட்டியுள்ளார். கருப்பு பணம் வைத்துள்ளோர் பெயர் பட்டியலில் தனது பெயர் எப்படி சேர்ந்தது என்பது புதிராக உள்ளதாக பங்கஜ் சமன்லால் லோதியா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+