தற்கொலை செய்து கொண்டாரா கலாபவன் மணி? சகோதரர் புகாரால் பரபரப்பு!
சாலக்குடி: நடிகர் கலாபவன் மணி மரணம் இயற்கையானது அல்ல... அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று மணியின் சகோதரர் அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், மலையாளத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்தவர் கலாபவன் மணி. கடைசியாக தமிழில் பாபநாசம் படத்தில் கமல் ஹாஸனுடன் நடித்திருந்தார்.

நுரையீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் காரணமாக நேற்று இரவு கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் மணி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக அவரது உடல் அங்குள்ள பிணக்கிடங்குக்கு எடுத்துச் செல்ல முயன்றபோதுதான், அவரது மரணத்தில் சந்தேகம் எழுப்பினார் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.
கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரை சாலக்குடி போலீசார் ஏற்று, பிரிவு 174-ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கலாபவன் மணியின் உடல் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
சாலக்குடி இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு குழுவும், டிஎஸ்பி சுதாகரன் தலைமையில் ஒரு ஸ்பெஷல் படையும் கலாபவன் மணி மரணம் குறித்து விசாரித்து வருகின்றன.
இதுகுறித்து திருச்சூர் ரூரல் எஸ்பி கார்த்திக் கூறுகையில், "கலாபவன் மணி மரணம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மரணம் குறித்து மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவக் குழு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்," என்றார்.
கலாபவன் மணி உடலில் மெத்தில் ஆல்கஹால் படிந்திருந்ததாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications