உச்சநீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்த முடியாதது - சித்தராமையா பேட்டி
பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்த இயலாததாகும் என்றும் இது தொடர்பாக நாளை கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறினார்.
காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும், 4 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு மீண்டும் வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறுகையில், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரங்களை ஆதாரத்துடன் மேற்பார்வை குழுவிடம் அளிக்கப்பட்டது. 20 முதல் 30ம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்து விட மேற்பார்வைக்குழு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமோ வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளது என சித்தராமையா கூறினார்.
மேலும், கர்நாடகத்தில், தண்ணீர் இல்லை என்று தலைமை செயலர் உட்பட உயர் அதிகாரிகள், காவிரி கண்காணிப்பு குழு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து கூறினோம். ஆனால், இதுபோன்ற தீர்ப்பு வந்துள்ளது. எனவே, மக்களும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும். யாரும் வேதனைபடக்கூடாது. விவசாயிகள் நலன் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
நாளை முதல் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்த இயலாததாகும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக நாளை மாலை 5 மணிக்கு கர்நாடக அமைச்சரவைக்கு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதில், பா.ஜ.க., ம.ஜ.த., ஆகிய எதிர்க்கட்சிகளும், கர்நாடகாவின் ராஜ்யசபா, லோக்சபா எம்.பி.,க்களும், காவிரி நீர்ப்பாசன பகுதி எம்.எல்.ஏ., க்கள், எம்.எல்.சி., க்கள் பங்கேற்கவுள்ளனர். இதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் சித்தராமையா.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications