ராஜ்யசபா தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தால் தகுதி நீக்கம் .. சுப்ரீம் கோர்ட்டில் காங். வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் நோட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வருகிறது.

குஜராத் ராஜ்யசபா தேர்தல் வரும் 8-ஆம் தேி நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இரானி, பல்வந்த் சிங் ராஜ்புட் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அகமது படேலும் போட்டியிடுகின்றனர். இதில் அகமது படேலை வெற்றி பெற விடாமல் தடுக்க பாஜக கடுமையாக முயல்கிறது. இதையடுத்து 44 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களையும் அக்கட்சி தலைமை பெங்களூரில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளது.

Congress against NOTA in Rajya Sabha polls and approaches SC

இந்நிலையில் திடீரென குஜராத் ராஜ்யசபா தேர்தலில் முதல்முறையாக நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நோட்டாவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு சாதகமாகி விடும் என்பதால் காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளது.

அதில், ராஜ்யசபா தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதை ஏற்று அந்த வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது.

BJP 13 Congress 17in Manipur ,Hung assembly predicted- Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Congress has filed a plea that the SC has to dismiss the MLAs who vote for Nota in Gujarat Rajya sabha election. SC will take hearing on this on tomorrow.
Please Wait while comments are loading...