சிறை விதிமீறலுக்காக சசிகலாவுக்கு கூடுதல் தண்டனை கிடைக்கும்.. ரூபா அதிரடி பேட்டி
பெங்களூரு சிறையில் சசிகலா விதிமீறல் செய்திருப்பது உறுதியானால் அவருக்கு சிறைத்தண்டனை அதிரிக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : சிறையில் சசிகலா செய்துள்ள விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கான சிறைத்தண்டனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள டிஐஜி ரூபாய் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் செய்து கொண்டதாக புகார் எழுந்தது. சிறையில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டு அவற்றை பயன்படுத்தி வந்ததாகவும், தனியாக குக்கர் உள்ளிட்ட பாத்திரங்கள் வைத்தும் ஆட்களை வைத்தும் சமைத்து சாப்பிட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கான ஆதாரங்களும் புகைப்படங்களாக வெளியாகின.
அடுத்த நாளே சிறை பெண் அதிகாரி ஒருவரின் துணையுடன் சசிகலா மற்றும் இளவரசி வெளியில் சென்றுவிட்டு சிறைக்குள் வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை கூட்டின. சசிகலா சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு கையில் ஷாப்பிங் பையுடன் உள்ளே பதுங்கி பதுங்கி வரும் சிசிடிவி காட்சிகள் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல ஆனது.

தண்டனை அதிகரிக்கும்?
இந்நிலையில் சிறை விதிமீறல்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் விசாரணையைத் தொடங்கி நடத்தி வரும் நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட டிஐஜி. ரூபா பெங்களூரு சிறையில் சசிகலா விதிமீறல் செய்திருப்பது உறுதியானால் அவருக்கு சிறைத் தண்டனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.

சிக்காத சசிகலா
சசிகலா சிறையில் இல்லாமல் சிறைக்கு வெளியே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நான் விசாரித்தேன். அதை நேரடியாக கண்டுபிடிக்கவும் முயற்சி செய்தேன். ஆனால் என் கண்ணில் அவர் மாட்டவில்லை. அப்படி அவர் வெளியில் சென்றதை நான் கண்டுபிடித்திருந்தால் நான் எடுத்த நடவடிக்கை பயங்கரமாக இருந்திருக்கும்.

கண்டுபிடிக்க முடியவில்லை
சசிகலா சிறைக்குள் ஆப்பிள் ஐ போன் மற்றும் 2 சிம்கார்டு வைத்திருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவரிடம் சோதனை நடத்தி என்னால் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வெளியில் உள்ளவர்களிடம் தொடர்பில் இருக்கிறார். அந்தப் பணிகள் இன்னும் நிற்கவில்லை.

அடிக்கடி சந்தித்தது யார்?
தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுத்ததாக டெல்லி போலீசாரால் விசாரிக்கப்பட்ட தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் பிரகாஷ் என்பவர் அவரை சந்தித்துள்ளதாக எனக்கு நம்பிக்கையான தகவல் கிடைத்தது, என்று ரூபா கூறியுள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications