தொடரும் விவசாயிகள் தற்கொலை... மகாராஷ்டிராவில் இந்தாண்டில் மட்டும் 57 பேர் தற்கொலை
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தாண்டு மட்டும் இதுவரை 57 விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளதாக மத்திய வேளாண் இணை அமைச்சர் மோகன்பாய் குண்டரியா மக்களவையில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.
உலக அளவில் நடைபெறும் விவசாயிகள் தற்கொலையில் 17 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது. விவசாயிகள் தற்கொலையில் மகாராஷ்டிர மாநிலம் முன்னிலை வகிக்கிறது. அங்கு தினமும் 7 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் மோகன்பாய் குண்டரியா எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரையில் 57 விவசாயிகள், வேளாண் துறை சார்ந்த காரணங்களுக்காக தற்கொலை செய்திருப்பதாக தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக இதுவரை தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.
மக்களவையில் அவர் தாக்கல் செய்த தரவுகளின்படி, கடந்த ஆண்டு 10 மாநிலங்களில் 1690 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 725 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 449 பேரும், தெலுங்கானாவில் 342 பேரும், கர்நாடகாவில் 107 பேரும், ஆந்திராவில் 58 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications