For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டச்சத்து குறைவிலும், பட்டினியிலும் சீனாவை முந்திய இந்தியா- ஐநா ”ஷாக்” ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 19 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலக நாடுகளில் மற்ற எந்த நாட்டை காட்டிலும் இந்தியாவில் அதிகப்படியாக 19 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 20 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9ல் ஒருவருக்கு குறைவு:

9ல் ஒருவருக்கு குறைவு:

உலக அளவில் 9 பேரில் ஒருவருக்கு தேவையை விட குறைவான உணவு அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகவும் கம்மி:

இந்தியாவில் மிகவும் கம்மி:

உலக அளவில் கடந்த 1990 ஆண்டுகளில் 79 கோடியாக இருந்த ஊட்டச்சத்து குறைபாடு அளவு தற்போது, 21 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் இதன் அளவு ஒன்றரை கோடி மட்டுமே குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

15 சதவீத மக்கள் பாதிப்பு:

15 சதவீத மக்கள் பாதிப்பு:

இந்தியாவில் 15 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா கூறியுள்ளது. இந்தியாவிற்கு அதிகப்படியாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நாடாக சீனா உள்ளது.

உணவில்லாமல் அவதி:

உணவில்லாமல் அவதி:

சிறு விவசாயிகள் பெரும்பாலானோர் தேவையான உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக விவசாய வளர்ச்சிக்கான ஐ.நா. சர்வதேச நிதி ஆணைய இயக்குனர் ஜோஸ்பினா ஸ்டப்ஸ் கூறியுள்ளார்.

தவறிய இந்தியா:

தவறிய இந்தியா:

அதே போல் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான இலக்கை எட்ட இந்தியா தவறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். உலக அளவில் இந்தியாவில் மட்டும் தான் 20 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐ.நா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆக்கபூர்வ நடவடிக்கை தேவை:

ஆக்கபூர்வ நடவடிக்கை தேவை:

1990 ஆம் ஆண்டுகளிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை இந்தியாவை விட சீனாவில் அதிகமான மக்கள் பட்டினியாக இருந்ததாக கூறியுள்ள ஐ.நா அந்நாடு மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் தற்போது 12 கோடி மக்கள் மட்டுமே அங்கு பட்டினியால் வாடுவதாக கூறியுள்ளது.

சீனவை முந்திய இந்தியா:

சீனவை முந்திய இந்தியா:

இதன் மூலம் சீனாவை காட்டிலும் இந்தியாவில் அதிகமானோர் பட்டினியால் வாடி வருவது தெளிவாக தெரிகிறது.

English summary
A report compiled by the UN said that the number of hungry people worldwide has reduced from one billion 25 years ago to about 795 million today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X