For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டோக்லாம் பதற்றம்: சீனாவுக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' தர இந்தியா அதிரடி முடிவு!

இந்திய சீன எல்லைப் பிரச்சனையில் நிலவும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த, இந்தியா அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறது.

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி: டோக்லாம் பகுதியில் நிலவும் எல்லை பிரச்சனையை அடுத்து, மின் வினியோக வசதி அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை, மத்திய மின்சார ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் டோக்லாம் எல்லை பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், எந்த நேரத்திலும் போர் உருவாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்துப் மத்திய அமைச்சர், இந்தியாவில் சீனா கொண்டுள்ள வியாபார தொடர்புகள் மீது கட்டுப்பாட்டை விதிக்க முயன்று வருவதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மின்சார பகிர்மானம் மற்றும் தொலை தொடர்பு துறைகளில், சைபர் தாக்கு தலை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இந்தத் துறைகளில் ஈடுபடும் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு, பல கட்டுப்பாடுகளை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 இந்தியாவில் சீனா

இந்தியாவில் சீனா

இந்தியாவில் தொலைத்தொடர்பு சாதனங்கள் விற்பனையில் சீனா முன்னணியில் உள்ளது. குறிப்பாக, ஓப்போ, விவோ, லெனோவா உள்ளிட்ட சீன போன்களின் விற்பனை, இந்திய மொபைல் போன்களின் சந்தையில் 50 சதவீதத்தைப் பெற்றுள்ளது. மின்சார பகிர்மான வசதிகள் வழங்குவதிலும் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. இதில் சீனா முக்கிய பங்கை வகித்து வருகிறது.

 மின் கட்டுப்பாடு

மின் கட்டுப்பாடு

டோக்லாம் பதற்றத்தால், சைபர் தாக்குதல் நடந்தால், பல மாநிலங்களில் மின் வினியோகம் பாதிக்கும் அபாயம் உள்ள தாக கூறப்படுகிறது. இதனால், மின் வினியோக வசதி அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை, மத்திய மின்சார ஆணையம் உருவாக்கியுள்ளது.

 புதிய நிபந்தனைகள்

புதிய நிபந்தனைகள்

இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள், 10 ஆண்டுகள் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும், அதன் நிர்வாகத்தில், இந்தியர்கள் இருக்க வேண்டும். அதே போன்று அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், குறிப்பிட்ட கால அளவிற்கு இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும் என்று ஆணையம் கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது.

 மின் பகிர்மான கருவிகள்

மின் பகிர்மான கருவிகள்

அதே போன்று மின் பகிர்மான கருவிகளுக்கான மூலப் பொருட்கள் வாங்கப்படும் இடம் பற்றிய தகவலையும் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகள் தரம் குறைந்ததாக இருந்து அந்நிறுவனங்கள் நாட்டில் எந்தப் பகுதியில் செயல்பட முடியாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய மின்சார ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான 21 நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

English summary
Union Power Minister, Piyush Goyal had said recently in an interview that the government would invoke the principle of reciprocity while awarding future contracts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X