பஞ்சாப் சிறை உடைப்பு.. தப்பியோடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் டெல்லியில் கைது
டெல்லி: பஞ்சாப்பில் நேற்று நடந்த சிறை உடைப்பு சம்பவத்தில் தப்பியோடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹரிமிந்தர் மின்டூ டெல்லியில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள நாபா சிறைச்சாலையில் ஆபத்தான தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்றுகாலை போலீஸ் யூனிபார்மில் வந்த மர்ம நபர்கள் சிறை காவலர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தி அங்கிருந்த காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் ஹர்மிந்தர் மிண்டூ உள்பட ஆறுபேரை மீட்டு சென்றனர்.

தப்பியோடிய ஆறுபேரையும் தேடி, கண்டுபிடித்து, கைது செய்ய மாநிலம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். இது காவல்துறைக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. தலைமறைவாக இருக்கும் மேலும் ஐந்துபேரை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஜி.பி. உறுதி செய்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications