மனைவிக்கு கேன்சர்... நவோமியுடன் ஆட்டம்.. பாரீஸ் ஹில்டனுடன் பார்ட்டி.. மோடியின் "மறுபக்கம்"!
டெல்லி: ஐயோ பாவம், லலித் மோடி மனைவிக்கு புற்று நோய். ஆபரேஷன் செய்யப் போறாங்களாம்.. நாம உதவாட்டா எப்படி என்று பதறியடித்து மனிதாபிமான உதவியை செய்துள்ளதாக கூறி வருகிறார் சுஷ்மா சுவராஜ். ஆனால் மறுபக்கமோ மனைவிக்கு புற்று நோய் என்பதைப் பற்றி கொஞ்சம் கூட வகைப்படாமல் ஜாலியாக மது விருந்து, மாதுக்களுடன் நடனம் என்று கேளிக்கை உலகில் திளைத்து வருகிறாராம் லலித் மோடி. இந்த மோடிக்குத்தான் மனிதாபிமான உதவியைச் செய்துள்ளதாக கூறுகிறார் சுஷ்மா சுவராஜ்.

இதுகுறித்து ஹப்பிங்டன் போஸ்ட் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், இங்கிலாந்து எம்.பி. கீத் வாஸ் மற்றும் சுஷ்மாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நடந்த இமெயில் உரையாடல்களையும் அது வெளியிட்டுள்ளது.
மேலும் மோடி படு ஜாலியாக பார்ட்டிகளுக்குப் போய் கொண்டாட்ட மன நிலையில் இருப்பதாகவும் அது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற மாடல் அழகி நவோமி கேம்பல், பாரீஸ் ஹில்டன் ஆகியோருடன் அவர் உற்சாகமாக பார்ட்டி கொண்டாடும் படங்களையும் அது வெளியிட்டுள்ளது.
இதில் விசேஷம் என்னவென்றால் லலித் மோடியின் சட்ட ஆலோசகராக செயல்படுவது சுஷ்மாவின் மகள் பன்சூரி கெளசல் என்பதுதான். சுஷ்மாவின் கணவர் சுவராஜ் கெளசலும், லலித் மோடிக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்தான்.
சொந்தக்காரப் பையனுக்கு அட்மிஷன் கேட்ட சுஷ்மா வீட்டுக்காரர்
2013ம் ஆண்டு தனது உறவினர் ஜோதிர்மயி என்பவருக்கு இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கித் தர முடியுமா என்று லலித் மோடிக்கு இமெயில் மூலம் உதவி கேட்டுள்ளார் சுஷ்மாவின் கணவர் சுவராஜ் கெளசல். இந்த இமெயிலை ஹப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. 2013 ஆகஸ்ட் 16ம் தேதி இந்த மெயில் போயுள்ளது.
3 நாட்களுக்குப் பிறகு இதுதொடர்பாக கீத் வாஸுக்கு மெயில் செய்கிறார் லலித் மோடி. சுஷ்மா சுவராஜ் தன்னிடம் பேசியதாகவும், சஸ்ஸெக்ஸ் குறித்து ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டதாகவும் கூறியுள்ளார் லலித் மோடி. அதற்கு கண்டிப்பாக செய்வதாக வாஸ் பதிலளித்துள்ளார்.
ஆனால் தற்போது ஜோதிர்மயிக்காக தான் லலித் மோடியை அணுகவில்லை என்று சுஷ்மா மறுத்துள்ளார்.
மொத்தத்தில் இந்த மோடிக்கு உதவப் போய் அந்த மோடிக்கு ஆல் இஸ் நாட் வெல் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டார் சுஷ்மா என்பதில் சந்தேகம் இல்லை.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications