For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகி நூடுல்ஸுக்கு "சங்கு" ஊதியது யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

லக்னோ: மேகி நூடுல்ஸ் இன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் சிக்கி நொந்து போய்க் கிடக்கிறது. மேகி நூடுல்ஸின் அபாயகரமான முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமை வி.கே.பாண்டே என்பவருக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.

டெல்லியில் மேகி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு இந்தத் தடை தொடரும். நெஸ்லே இந்தியா நிறுவனமும் மேகியால் பெரும் சட்டச் சிக்கலில் மாட்டியுள்ளது.

இந்த விவகாரம் இவ்வளவு பெரிய சிக்கலாக மாற வி.கே.பாண்டேதான் காரணம் என்பது பலருக்குத் தெரியாது. அதைப் பற்றிப் பார்ப்போம்.

Meet the whistleblower and know how the controversy unfolded
  • வி.கே.பாண்டே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி ஆவார்.
  • 40 வயதான பாண்டே, உ.பி. மாநிலம் பாரபங்கியைச் சேர்ந்தவர்.
  • இவர்தான் முதல் முறையாக நெஸ்லே மீது வழக்குப் போட்டவர்.
  • இதற்கு முன்பு பிரிட்டானிகா கேக், வாஹித் பிரியாணி ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்குப் போட்டு திணறடித்தவர் பாண்டே.
  • இவர் போட்ட வழக்கால், தனது பத்திரிகை விளம்பரத்தில் இது அசைவ கேக் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
  • முன்பு இந்த வாசகத்தை அது கண்ணுக்குத் தெரியாத பிரவுன் கலரில் போட்டு வந்தது. ஆனால் பாண்டே போட்ட போட்டால் சிவப்பு கலரில் போட ஆரம்பித்தது.
  • லக்னோவைச் சேர்ந்த பிரபல பிரியாணி நிறுவனமான வாஹித் பிரியாணி மீதும் கேஸ் போட்டவர் பாண்டே.
  • பிரியாணியில் அவர்கள் சேர்க்கும் நிறத்தில் சர்ச்சை இருப்பதாக பிரச்சினை கிளப்பினார் பாண்டே.
  • 2014ம் ஆண்டு மார்ச் 10ம் தேதிதான் மேகிக்கு பிரச்சினை கிளம்பியது. சில சாம்பிள் பாக்கெட்களை வாங்கி வந்த பாண்டே அதை சோதனை செய்தார்.
  • பின்னர் அதை மேல் சோதனைக்கு அனுப்பி வைத்தார். நெஸ்லே உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததைக் கண்டுபிடித்தார்.
  • கோரக்பூரில் நடந்த சோதனையின்போது அதிக அளவிலான எம்எஸ்ஜி கலந்திருப்பது தெரிய வந்தது.
  • இதையடுத்து நெஸ்லே இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாண்டே.
  • ஆனால் இந்த நோட்டீஸை எதிர்த்து அப்பீல் செய்தது நெஸ்லே.
  • இதனால் கடுப்பான பாண்டே மீண்டும் ஒரு நோட்டீஸ் விட்டார். இதனால் சற்று அதிர்ந்தது நெஸ்லே.
  • கொல்கத்தா ஆய்வகத்தில் சோதனை செய்ய அது முன்வந்தது. இதற்காக ரூ. 1000 கட்டணத்தையும் கட்டியது.
  • கொல்கத்தா ஆ்ய்வகத்திலும் மேகியின் குட்டு உடைந்தது. மேலும் இந்த சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் பெரும் சிக்கலானது.
  • இதன் பிறகுதான் உ.பி. அரசு மேகிக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியது. இன்று நாடு முழுவதும் இது பரவியுள்ளது.
English summary
Many maggie lovers in the country have been going through a tough phase as their favourite, easy-to-make food product faced ban. But do you know who is the whistleblower in this case? Meet the person who has been hailed as one hero. VK Pandey is the man.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X