Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதன்கோட் விமானதளத்தில் அடையாளம் தெரியாத சடலம்.. 6வது தீவிரவாதி உடலா?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பதன்கோட் விமானதள தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அடையாளம் தெரியாத ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது தீவிரவாதியுடைய உடலா என சோதனை நடைபெற்றுவருகிறது.

பதன்கோட் விமானபடை தளத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 7 பாதுகாப்புபடையினர் பலியானார்கள். 5 தீவிரவாதிகள் கொல்லபட்டனர். 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக நேற்று மாலை தகவல்கள் வெளியான நிலையில், என்.எஸ்.ஜி அதிகாரி ஒருவர் கூறுகையில், பதுங்கி உள்ள ஒரு தீவிரவாதியை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய விமானப்படை தளத்தில் உள்ள பாதுகாப்பு படை குடும்பங்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றார்.

Pathankot attack: 5 terrorists killed, operation still on, says NSG

6 பேரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அதில் ஒருவர் உடல்தான் இன்னும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவித்த நிலையில், இன்று காலை நடந்த தேடுதல் வேட்டையில், விமானத்தளத்திற்குள் ஒரு தீவிரவாதியின் சடலம் கிடந்தது தெரியவந்தது. அது தீவிரவாதியுடையதாக இருக்கலாம் என தெரிகிறது. அதுகுறித்து பரிசீலனை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+