காசு மேல காசு வந்து ... 7வது ஊதிய குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது.
70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் ஊதி யத்தை உயர்த்த 7வது ஊதிய குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படை யில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
ரூ.7 ஆயிரமாக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரமாகவும், ரூ.90 ஆயிரமாக உள்ள அதிகபட்ச ஊதியத்தை ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தலாம் என்ற 7-வது ஊதிய குழுவின் பரிந் துரையையும் அமைச்சரவை செயலர்கள் குழு திருத்தியுள்ளது. அதில் குறைந்தபட்சமாக ரூ.23,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.25 லட்சமாகவும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஊதிய குழுவின் பரிந்துரைகள் கடந்த ஜனவரி 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7வது ஊதியக் குழு பரிந்துரைகளால் ஊழியர்களுக்கு மொத்தமாக 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது, அடிப்படை ஊதியத்தில் 14.27 சதவீதம் உயர்வு மற்றும் இதர படிகளை சேர்த்து மொத்தமாக 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கு முன் 6வது ஊதியக் கமிஷன் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது.
7வது சம்பள கமிஷனை அமல்படுத்த இந்தாண்டு பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதனால் ரூ.70 ஆயிரம் கோடி இடைக்கால ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications