பிரதமர் அலுவலகம் முன்பு திடீர் முழு நிர்வாண போராட்டம்- தரையில் உருண்ட 7 தமிழக விவசாயிகள் கைது!
டெல்லியின் பிரதமர் அலுவலகம் அருகே நிர்வாணமாக போரடிய தமிழக விவசாயிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அருகே நிர்வாணமாக தரையில் உருண்டு போராடிய தமிழக விவசாயிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக விவசாயிகள் கடந்த 28 நாட்களாக அரை நிர்வாணமாக போராடி வருகின்றனர். தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 26 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் விவசாயிகளின் கோரிக்கையாகும்.
28 நாட்களாக போராட்டம்
பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தை கையிலெடுத்து தங்களது பாதிப்பையும் கோரிக்கையையும் மத்திய அரசுக்கு தெரிவித்து 28வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
இன்று பிரதமர் மோடியை சந்திக்கப் போவதாக கூறினர். இந்த நிலையில் திடீரென்று விவசாயிகள் நாடாளுமன்றம் முன்பு துணிகளை களைந்து விட்டு நிர்வாணமாக ஓடினர். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நிர்வாண உருள்வலம்
நாடாளுமன்ற வளாகத்தில் கைகளை மேலே தூக்கியவாறு முழக்கமிட்ட அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்மிட்டனர். கீழே விழுந்து உருண்டனர்.
உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.
எங்களுக்கு வேறு வழியில்லை
அப்போது பேசிய விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, பிரதமர் மோடியை சந்திக்க வைப்பதாக கூறி தங்களை ஏமாற்றவிட்டனர் என்று கூறினர். எங்களுக்கு இதைத்தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications