ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 177 தமிழர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்.. வனத்துறை அதிகாரி தகவல்
செம்மரக் கடத்தலுக்கு இளைஞர்கள் பலிகடாவாக்கப்படுகின்றனர் என்று ஆந்திர வன பாதுகாப்பாளர் மூர்த்தி கூறியுள்ளார். இதற்கு மூளையாக செயல்படுபவர்களை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
கடப்பா: யாரோ செய்யும் குற்றத்திற்கு செம்மரக் கடத்தலில் இளைஞர்கள் பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர் என்று வனத்துரை அதிகாரி மூர்த்தி கவலை தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் ஒண்டிபேண்ட்டா அருகே செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 கார்களில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ. 4 கோடி மதிப்பிலான 280 செம்மரக் கட்டைகள், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 8 பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வனப் பகுதிக்குள் செம்மரம் வெட்டச் சென்றிருந்தது தெரியவந்தது.

தமிழக தொழிலாளர்கள் கைது
இதைத்தொடர்ந்து, போலீஸாரும், வனத் துறை ஊழியர்களும் இணைந்து வனப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, காசிபேட்டா வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த சுமார் 150க்கும் மேற்பட்ட தமிழகத் தொழிலாளிகள் கைது செய்யப்பட்டு வனச் சரக அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

விசாரணை
பிடிபட்டவர்கள் அனைவரும் திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம் பொதட்டூரில் வன பாதுகாப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசினார்.

இளைஞர்கள் பலிகடா
அப்போது, செம்மரம் கடத்தலை தடுக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் செம்மரக் கடத்தலில் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர் என்று கூறிய அதிகாரி, கடத்தலுக்கு மூளையாக செயல்படுபவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்
கைது செய்யப்பட்ட 177 தமிழர்களும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்றும் அதன் பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே இந்த 177 பேரின் நிலை என்ன என்பது தெரியவரும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications