For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வை ஒரு முறை கூட சந்திக்க இயலவில்லை... மத்திய மின்சாரத்துறை அமைச்சர் "ஷாக்" புகார்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய மாநிலங்களில் ஒன்றாக இருந்த போதும், மற்ற மாநில முதல்வர்களை எளிதால் சந்திக்க முடிந்தது. ஆனால் தமிழக முதல்வரை ஒருமுறை கூட சந்திக்க இயலவில்லை என பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல்.

தலைநகர் டெல்லியில், இந்திய வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு, ‘இந்தியாவை பொருளாதார வல்லரசாக ஆக்குவோம்' என்ற தலைப்பில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் பேசினார்.

அப்போது அவர், ‘இந்தியாவில் 2030 ம் ஆண்டுக்குள் அனைத்து இடங்களிலும் 100 சதவீதம் எலெக்ட்ரானிக் வாகனங்களை கொண்டுவந்துவிட வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளதாகத்' தெரிவித்தார்.

குற்றச்சாட்டு...

குற்றச்சாட்டு...

அதோடு, மேலும் பல்வேறு திட்டங்கள் பற்றிப் பேசிய அமைச்சர், கடந்த 18 மாதங்களில் தமிழக முதல்வரை மட்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை. நேரில் சந்திக்க அவர் நேரம் ஒதுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

28 அமைச்சர்கள்....

28 அமைச்சர்கள்....

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘நான் பல மாநிலங்களில் நிறைவேற்றும் மின் திட்டங்கள் தொடர்பாக அங்குள்ள முதல்வர், அமைச்சர்களுடன் பேசி வருகிறேன். கடந்த 18 மாதங்களில் இப்படி 28 மாநிலத்தின் மின்துறை அமைச்சரை மட்டுமல்ல, முதல்வர்களுடன் கூட பேச முடிந்தது.

ஜெ.வை சந்திக்க முடியவில்லை...

ஜெ.வை சந்திக்க முடியவில்லை...

இதில் 29 வது மாநிலம் தமிழ்நாடு; அது பற்றி தான் உங்களுக்கு ஒரு முக்கிய விஷயம் சொல்லப்போகிறேன். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம்தான். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை என்னால் இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு முறை மின்துறை அமைச்சரிடம் பேசினேன். அதற்கு அவர், நான் அம்மாவிடம் பேசுகிறேன் என்றார். ஆனால் அதன் பின் பல மாதங்கள் பதில் வரவில்லை.

அறிக்கை....

அறிக்கை....

நாடாளுமன்றத்தில் இந்த கட்சி எம்.பி.க்கள் தாங்களாகவே ஒருவரும் வாய் திறப்பதே இல்லை. அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேச வேண்டுமானால், சென்னையில் இருந்து அறிக்கை தயாரித்து வர வேண்டும்.

அனுமதி கிடைக்கவில்லை...

அனுமதி கிடைக்கவில்லை...

நான் மற்ற 28 மாநில முதல்வர்களுடன் பேசி உள்ளேன். கடந்த 18 முதல் 22 மாதங்களில், தமிழக முதல்வருடனும் பேச முயற்சி செய்தேன். என்னால், ஒரே ஒரு முறை மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. அடுத்த முறை சென்னையில் சந்திக்க உறுதி அளித்தார். ஆனால், இதுவரை எனக்கு அவரிடம் இருந்து அனுமதி கிடைக்கவே இல்லை' எனத் தெரிவித்தார்.

காற்றாலை மின்சாரம்...

காற்றாலை மின்சாரம்...

இந்தக் கருத்தரங்கில் பேசிய தமிழக மாணவர் ஒருவர், "தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் கணிசமான அளவுக்கு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அதை சரிவர பயன்படுத்தவே இல்லை. இது பற்றி மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு இதுபற்றி நடவடிக்கை எடுத்து, மத்திய மின் தொகுப்பில் பெற்று பயன்படுத்த முடியுமா?' என அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

எப்படிப் பேச முடியும்?

எப்படிப் பேச முடியும்?

அதற்கு பியுஸ் கோயல், ‘தமிழக முதல்வரையே சந்திக்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது எப்படிப் பேச முடியும்' எனப் பதிலளித்தார்.

English summary
Speaking at the CII Young India meet in New Delhi, MoS for Power Piyush Goyal hit out at the Jayalalithaa government, calling Tamil Nadu “a state within a state, a part of the country where I cannot reach out to the Chief Minister.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X